உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்கலாம்.

கேள்வி - பதில்

கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199)  மேலும் படிக்க...

வானவர்களை அவர்களுடைய யதார்த்தமான தோற்றத்தில் இம்மையில் நம்மால் காணமுடியாது என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை(அலை) அவர்களின் யதார்த்தமான தோற்றத்தில் 600 இறக்கைகளை உடைய உயர்ந்த அவர்களின் தோற்றத்தை இரண்டு முறை மட்டுமே பார்த்ததாக ஹதீஸ்களில் நாம் பார்க்க முடிகிறது.  மேலும் படிக்க...

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் ரமலானில் நோன்பு நோற்பது சிரமமாக இருப்பின் ரமலான் நோன்பை விட்டு விடலாம்.  மேலும் படிக்க...

இமாமாக இருக்கக் கூடியவர் கூடியவர் ஒரு சூராவையோ அல்லது குறிப்பிட்ட சூராக்களையோ மீண்டும் மீண்டும் ஓதி தொழுகை நடத்தலாம் ஏனெனில்  மேலும் படிக்க...

தாராளமாக சொல்லிக் கொடுக்கலாம் பொதுவாக மாற்று மதத்தினர் விரும்பி கேட்பது அவர்களுக்கான நோய்களுக்காக பாதுகாப்பிற்காக, தூங்கும் முன்பும் மற்றும் தூங்கி எழுந்த பின்பும் ஓதக்கூடிய துஆகளை கேட்டுக் கொண்டால் நாம் சொல்லிக் கொடுக்கலாம்.  மேலும் படிக்க...

பொதுவாக வெற்றி என்பது அல்லாஹ்வின் உதவியினால் அமைவதாகும் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம் மீது கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான் நாம் ஈமான் கொண்டவர்களாக இருப்பின் உதவி செய்வது அல்லாஹ் தன் கடமையாக குறிப்பிடுகின்றான்.  மேலும் படிக்க...

சோதனைகள் அதிகமாகும்போதும் அதனுடைய பாதிப்புகள் அதிகமாகும்போதும் நாம் அல்லாஹ்வின் மீது அதிகம் தவக்குல் வைத்து அவனை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும். கஷ்டங்கள் சோதனைகள் ஏற்படும் போது அல்லாஹ் திருகுர்ஆனில் கூறுகையில் நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் எங்களைத் தீண்டாது அவனே எங்களின் பொறுப்பாளன் எஜமானன்.  மேலும் படிக்க...

ஒருவர் தன் மனதில் திடீரென்று நினைக்கும் தீமையான, தவறான எண்ணங்களை வெளிப்படையாக பேசாமல் மற்றும் அதை செயல்படுத்தாமல் இருக்கும் வரை அல்லாஹுத்தஆலா மன்னித்து விடுகின்றான் என்று ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் படிக்க...

ஸகாதுல் ஃபித்ர் கொடுத்துதான் ஆகவேண்டும். ஏனென்றால் நபியவர்கள் இந்த ஸகாத் ஃபித்ராவை பற்றி சொல்லும் பொழுது முஸ்லிமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அடிமைகளின் மீதும் ஸகாத் ஃபித்ர் கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது கூறுகின்றார்கள்.  மேலும் படிக்க...

ரமலான் இரவில் முழு குர்ஆனையும் முடிக்கவேண்டும் என்று நமக்கு வலியுறுத்தப்படவில்லை ஆனால் பொதுவாக ரமலான் நாட்களில் குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுதல் இருக்கின்றது.  மேலும் படிக்க...

ஹதீஸ்களில் இதுதொடர்பாக எந்த ஆதாரமுமில்லை. நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் ஒரு மாதகாலம் தொழுகையில் குன்னூத் ஓதியதாக உள்ளது அதில் ஃபஜர் தொழுகையும் அடங்கும்.  மேலும் படிக்க...