கேள்வி:

கேள்வி 34: குடும்பத்தில் பிறையைப் பற்றின இரண்டு விதமான கருத்து காரணத்தினால் பெருநாள் தொழுகையை எப்படி நிறைவேற்றுவது? ஒருவர் பெருநாள் கொண்டாடும் சமயம் வீட்டில் மற்றொருவர் நோன்பு வைக்கலாமா.?

Answer by admin On June 28, 2020

பதில்:

இந்த ஊரடங்கு சமயத்தில் மற்ற வஃக்த் தொழுகையும் பெருநாள் தொழுகையும் வீட்டிற்குள்ளேயே நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் கருத்து வேறுபாடு அடிப்படையில் ஒரு நாள் முன்னர் நோன்பு நோற்றவர் தனக்கு பெருநாளாக இருப்பினும் அந்நாளில் அவர் நோன்பு நோற்காமல் இருக்கவேண்டும். பெருநாள் தொழுகையும் தொழுக வேண்டியது இல்லை. அடுத்த நாள் அவர்களின் குடும்பத்தார்களுடன்  சேர்ந்து பெருநாள் தொழுகை மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் இது ஜமாஅத்தாக தொழ கூடிய தொழுகையாக இருப்பதால் இவ்வாறு செய்வது சிறந்தது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு வியாபாரக் கூட்டம் அவர்களிடம் நாங்கள் நேற்று பிறையைப் பார்த்து விட்டோம் என்று கூறிய பிறகு பெருநாள் அன்று வைத்திருந்த நோன்பை நபி(ஸல்) அவர்கள் விட்டுவிட்டு மதினா வாசிகளையும் நோன்பை விட்டுவிட கூறினார்கள்.மேலும் அன்றைய நாள் மதிய வேளையை நெருங்கியதால் நாம் நாளை பெருநாள் தொழுகையை நிறைவேற்றலாம் என்று கூறினார்கள் என்கிற ஹதீஸ் அடிப்படையில்  இதன் மூலம் பெருநாள் தினம் என்று அறிந்திருந்தும் அதை அடுத்த நாள் நாம் நிறைவேற்றலாம் என்பதைக் காணமுடிகிறது.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 74, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.