கேள்வி:

கேள்வி 35: பிறந்தநாள் வாழ்த்துக் கூறலாமா? பிறந்தநாளன்று கொடுக்கப்படும் இனிப்பை சாப்பிடலாமா?

Answer by admin On June 28, 2020

பதில்:

 இஸ்லாத்தின் அடிப்படையில் பிறந்தநாளை கொண்டாட ஆதரிக்கவும் இல்லை  தடுக்கவும் இல்லை. தவறில்லை என்ற காரணத்தினால் நாம் அதனை மேம்படுத்திக் கொள்வது கூடாது நபி (ஸல்) அவர்கள் கூற்றுப்படி யார் பிற சமுதாய மக்களை போன்று செயல்படுகிறார்களோ அவர் அவர்களை சார்ந்தவர் ஆகிவிடுகிறார்கள். சமுதாயத்தில் அவரவர் தங்கள் வசதிக்கேற்ப வீண் செலவு செய்து நடப்பது என்பது முற்றிலும் மாற்று சமுதாய மக்களை போன்றதாகிறது. இதனை நிகழ்ச்சிகளாக சம்பிரதாயமாக இஸ்லாத்தில் அல்லாதவர்கள் செய்கிறார்கள். அதனை நாம் பின்பற்றக் கூடாது என்பது நமக்கு விதித்த தடை . இதனடிப்படையில் வளைகாப்பு பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றவற்றை ஆதரிக்கக் கூடாது அது நம்மை பிற சமுதாயத்தவர்களாக ஆக்கிவிடக்கூடும். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படக் கூடிய இனிப்பை நாம் புசிப்பது ஹராம் ஆகாது எனினும் மார்க்கத்திற்கு புறம்பானது என்று கூறி தவிர்த்துக் கொள்வது சிறந்தது . மேலும் வீண் விரயங்கள், இஸ்லாத்திற்கு எதிரான இசையை அரங்கேற்ற கூடியவர்களாக இருகிறார்கள். சஹாபாக்கள் காலத்தில் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக எந்த கருத்துக்களும் ஹதீஸ்களும் இல்லை என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அவர்கள் எப்படி அலட்சியப்படுத்தி விட்டு விட்டார்களோ நாமும் அப்படியே விட்டு விட வேண்டும் அதுவே மேலானது.

- உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி

Youtube - Ahlul Islam : கேள்வி 92, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.