கேள்வி:

கேள்வி 36: ஈமான் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.?

Answer by admin On June 28, 2020

பதில்:

அல்லாஹுத்தஆலா நமது மீது கடமையாக்கப்பட்ட தொழுகையும் , நஃபீலான தொழுகையை அதிகமாக பேணுதலும், மேலும் ஸகாத், தர்மம், திக்ரு இதுபோல நற்செயல்கள் செய்வதன் மூலமாகவும் ஈமானை அதிகரித்துக் கொள்ளலாம்.  இபாதத்தை அதிகரிக்கலாம் பாவம் செய்வது மூலமாக ஈமான் குறையும்  என்பது அஹ்லில் சுன்னாவின் நிலைப்பாடாகும். மேலும் அல்லாஹ்வுடைய வேதம் திருக்குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதனை புரிந்துகொள்வதும்  உள்ளத்தில் ஈமானை அதிகரிக்கச் செய்யும் குர்ஆன் வசனங்களை புரிந்து நடப்பதற்கே அல்லாஹ் அதனை நமக்கு வேதமாக அருளியுள்ளான். அதனை தொடர்ந்து நல்ல மக்களுடன் நம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது வணக்க சாலிகள் மூலம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்வது மறுமையை நினைவு கூறுவது நன்மையை ஏவி தீமையை தடுப்பது இது போன்ற வழிகள் மூலமாகவும் நமது ஈமானை அதிகரிக்கச் செய்யலாம். 

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 05, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.