கேள்வி:

கேள்வி 37: அத்தஹியாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கலாமா கூடாதா?

Answer by admin On June 28, 2020

பதில்:

அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றி நஸயீ ஹதீஸில் ஒரு ஸஹாபி கூறுவது ரஸூல்(ஸல்) அவர்கள் அத்தஹியாத்தில் இருப்பில் விரலை அசைத்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பல மார்க்க அறிஞர்கள் அறிவிப்பாளர் அடிப்படையில் அதனை குறை கண்டு பலவீனமான ஹதீஸ் என்று நமக்கு தெளிவு படுத்துகிறார்கள்.இன்னும் ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு முரணாக வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் அத்தஹியாத்தில் விரலை உயர்த்துவார்கள் அசைக்க மாட்டார்கள் என்று அபூதாவூத் ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் நாம் ஆட்காட்டி விரலை அசைப்பது முறை அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 63, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.


அத்தஹியாத் இருப்பில் சிலர்  விரலசைப்பதும் சிலர் அசைக்காமல் இருப்பதுமான நடை முறை உம்மத்தில் இருந்து வந்தது.

குர்ஆன் ஹதீஸ் வழியில் பிரச்சாரங்கள் செய்த ஷைக்  அல்பானி(ரஹ் ) அவர்கள் விரலை அசைப்பது நபிவழி என்று தவறுதலாக புரிந்து கொண்டு அதைப் பிரச்சாரமும் செய்தது தான் மக்கள் மத்தியில் அது  தீவிரமாக  பரவ காரணமானதுஎவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் மனிதர் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.

அத்தஹியாத் இருப்பில் விரலசைப்பதற்கு காட்டப்படும் ஆதாரங்கள் பலவீனமானவைசந்தேகத்துக்குரியவை என்பதற்கான ஆதாரங்களை தருகிறேன்.

விரலசைப்பதற்கு ஆதாரமாக காட்டப்படும் ஹதீஸ்நபி (ஸல்)
அசைத்ததை வாயில் பின் ஹுஜ்ர் (ரலிஎன்ற நபி தோழர் பார்த்ததாக
குறிப்பிடுகிறதுஇந்த நபிமொழிஅறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் பலவீனமான நபிமொழியாகும்அத்துடன் கருத்தும் மற்ற வலுவான ஆதாரங்களுக்கு ஒத்து வரவில்லை.

அறிவிப்பாளர் பிரச்சனைஒன்று

இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஆஸிம் பின் குலைப் என்ற அறிவிப்பாளர் பற்றி நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்த துறையில் சிறந்த அறிஞரான இமாம் இப்னுல் மதீனீ ,  “இவர் தனியாக அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது  என்று கூறியிருக்கிறார்கள். (பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 5 பக்கம் :49)

இப்னுல் மதீனியின் கூற்றை வலுப்படுத்தும் விதமாகவே இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)அவர்களின் கூற்றும் அமைந்துள்ளதுஇப்னு ஹஜர் அவர்கள்அறிவிப்பாளர் விமர்சகர்களான அறிஞர்கள் எல்லோருடைய கருத்தையும் எடுத்து வைத்து அலசி முடிவு சொல்பவர்.

இந்த ஆசிம் பின் குலைப் பற்றி இப்னு ஹஜர்ஸதூக் என்கிறார்கள்இந்த வார்த்தைக்கு உண்மையானவர் என்று அர்த்தம் இருப்பினும் ஒரு அறிவிப்பாளர் குறித்து இப்னு ஹஜர் இந்த வார்த்தையைச் சொன்னால் அவர் நம்பகமானவர் என்றாலும் மறதி அல்லது  கூட்டி குறைத்து சொல்லும் குறை அவரிடம் இருக்கும் என்பது தான் அதன் கருத்து.
(
தக்ரீபுத் தஹ்தீப்  பாகம் :2 பக்கம் : 286 )

இதை மெய்ப்பிக்கும் விதத்தில் அத்தஹிய்யாத் இருப்பு முறை பற்றிய மிகமிக ஆதரப்பூர்வமான நபி மொழிகளெல்லாம் இந்த அசைத்தல் இல்லாமல் இருக்கிறது.

அறிவிப்பாளர் பிரச்சனைஇரண்டு

இந்த அறிவிப்பாளர் தொடர் பிரச்சனையில் இன்னொரு குறையை சில அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது என்னவெனில் ஆஸிம் பின் குலைப் வழியாக இந்த நபி மொழியை அறிவிக்கும் பல அறிவிப்பாளர்கள் உள்ளனர்அவர்களில் எவரும் சொல்லாத இந்த அசைப்பு செய்தியை ஸாயிதா என்பவர் மட்டுமே சொல்கிறார்.

ஸாயிதா தரமான அறிவிப்பாளர் தான் என்றாலும் தன்னைப் போன்றஆஸிமின் பல மாணவர்கள் அறிவிக்கும் செய்திக்கு வேறுபட்ட தகவலை சொல்லி இருப்பதால் இந்த செய்தி ஷாத் என்ற பலவீனமான நிலையை அடைகின்றது என்கின்றனர்இதைக் கூறும் சில அறிஞர்களின் கூற்றை கீழே தருகிறேன்.

முஸ்னது அஹ்மது ஹதீஸ் எண் : 18890. இது அசைத்ததை பார்த்ததாக கூறும் ஹதீஸ்இதன் கீழ் அல்லாமா ஷுஐப்  அல்அர்னவூத் அவர்கள் குறிப்பிடுவது:
இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ்ஆனால் அதை அசைக்க நான் பார்த்தேன் என்னும் வாசகம் ஆதாரப் பூர்வமானதல்லஏனெனில் அது ஷாத் வகையாகும்இதனை ஸாயிதா மட்டுமே தனியாக கூறியிருக்கிறார்.

 இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸ் துறை
பெரிய இமாம்களில் ஒருவரான இமாம் இப்னு குஸைமா (ரஹ்அவர்களும் மேற்கண்ட செய்தியை மேலோட்டமாக
கூறியிருக்கிறார்கள்.

ஸஹீஹ்  இப்னு குஸைமா  ஹதீஸ் எண்  714 (சம்பந்தப் பட்ட ஹதீஸ்),  ஹதீஸ் வாசகம் முடிந்ததும் இப்னு குஸைமா எழுதுவது:

அபூபக்கர் (இப்னு குஸைமா ) கூறுவது “ஹதீஸ்களில் எதிலும் அதனை அசைப்பார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லைஇந்த ஹதீஸை தவிர!  அசைப்பு பற்றி கூறுவது இதில் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

காலித் பின் அப்தில்லாஹ் என்பவர் ஆஸிம் பின் குலைப்  வாயிலாக
அறிவிக்கும் இதே ஹதீஸை இமாம் பைஹகீ (ரஹ்அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதில் விரலை அசைத்ததாக இல்லை. (பார்க்கஅஸ்ஸுனனுல் குப்ராஹதீஸ் எண்: 2895 பாகம் 2, பக்கம் 131)

இந்த ஹதீசஸுக்குக் கீழ் இமாம் பைஹகீ எழுதுவது:

இந்த கருத்தில் தான் ஆஸிம் பின் குலைபிடமிருந்து ஒரு கூட்டமே இந்த ஹதீஸை அறிவித்துள்ளதுநாம் இதையே நடைமுறை படுத்துவோம்இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதையும் இப்னு ஸுபைரின் ஹதீஸில்
அறிவிக்கப்பட்டுள்ளதையும் நாம் தேர்ந்தெடுப்போம்இரண்டிலும் விரலை அசைத்ததாக இல்லைஇப்னு ஸுபைரின் ஹதீஸில் விரலை அசைக்கவில்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்களிருவரின் ஹதீஸ் உறுதியாக இருக்கிறதுஅறிவிப்பாளர் தொடர் பலமாகவும் இருக்கிறதுமட்டுமின்றிஇந்த அறிவிப்பாளர்கள் ஆஸிம் பின் குலைபை விட தனித்தன்மை உடையவர்களாகவும் கூடுதல் சிறப்புக்குரியவர்களாகவும் உள்ளனர்அல்லாஹ்விடமே நல்லுதவி உள்ளது.

இவ்வாறு பைஹகீ (ரஹ்அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிஞர்களின் கருத்துப்  படி விரலை அசைப்பது தொடர்பாக ஸாயிதா தவறுதலாக அதிகமாக்கி கூறிவிட்டார்இதை உறுதிப்படுத்த கீழ்வரும் அறிவிப்பாளர்கள் பெயர்களையும் அவர்கள் அறிவித்துள்ள வாசகத்தையும் பார்ப்போம்.

1) ஆஸிம்  ஸாயிதா  விரலை அசைத்தார்கள்  நஸஈ 889

2)ஆஸிம்  சுஃப்யான்  விரலை நட்டு  வைத்தார்கள்  நஸஈ 1159

3)ஆஸிம்  அப்துல் வாஹித் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் அஹ்மத் 18870

4)ஆஸிம்  ஷுஅபா  ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் அஹ்மத் 18875

5)ஆஸிம் ஸுஹைர் பின் முஆவியா  ஆட்காட்டி விரலால் சுட்டிக்
காட்டினார்கள்  அஹ்மத் 18896

6) ஆஸிம் மூசா பின் அபீ ஆயிஷா ஆட்காட்டி விரலால் சுட்டிக்
காட்டினார்கள்  பஸ்ஸார் 4489

7)ஆஸிம் மூசா பின் அபீ கஸீர் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் –தப்ரானி 17555

மேற்கண்ட விரல் உயர்த்துதல் பற்றிய ஹதீஸின் அறிவிப்பாளர்களில்
ஆஸிமிடமிருந்து செவியுற்ற ஏழு மாணவர்களில் ஆறுபேர் ஒருவிதமாகவும் ஸாயிதா என்ற மாணவர் மட்டும் வேறு விதமாகவும் அறிவித்திருப்பதை பார்க்கிறோம். (ஆசிமின் இந்த ஆறு மாணவர்கள் மட்டுமின்றி வேறு  மாணவர்களும் ஸாயிதாக்கு மாற்றமாகவே அறிவித்துள்ளனர் என்று அறிஞ்சர்கள் கூறுகின்றனர்.)

இதனால் இமாம் பைஹகீ உள்ளிட்ட பல அறிஞர்கள் ஸாயிதாவின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தத் தகுந்ததல்ல என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இதை நாம் முன்பு பார்த்தோம்.

இங்கு சிலர் ஸாயிதவின் மாறிப்போன அறிவிப்பை சரிகாண்பதற்க்காக தவறான வியாக்கியானம் கொடுக்கிறார்கள்அதற்கு சரியான விளக்கத்தை கீழ்வரும் பகுதியில் பார்ப்போம்.

கருத்து அடிப்படையில் : ஓன்று

நாம் மேலே கண்டவாறு ஆஸிம் பின் குலைபின் ஆறு மாணவர்கள் ஆட்காட்டி விரலால் சுட்டி காட்டியதாகவும் நட்டு வைத்ததாகவும் சொல்லஸாயிதா என்ற மாணவர் மட்டும் விரலை அசைத்ததாக இன்னொரு விதமாக முரணாகச் சொல்கிறார்இது ஷாத்
என்ற பலவீன நிலையை அடைகிறதுஇந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு செயல்படுத்தத் தகுந்ததல்ல.

ஆனால் மறுத்து வியாக்கியானம் தருகிறோம் என்ற பெயரில் சிலர் வைக்கும் வாதம்;
விரலை அசைத்து கொண்டிருப்பது சுட்டி காட்டுவதற்கு முரணல்லஆகவே அசைப்பதாக வரும் அறிவிப்பை சுட்டிக்காட்டியதாக வரும் செய்திக்கு கூடுதல் விளக்கமாக எடுத்து கொள்ள வேண்டும்.

ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுவது அதை அசைத்து கொண்டிருப்பதற்கு முரணானதுஅசைத்து கொண்டிருப்பது சுட்டிக்காட்டுவதாக ஆகாது.

அதனால் தான் அரபு மொழியிலும் ஹதீஸ்களிலும் சிறந்த இமாம் பைஹகீ அவர்கள் அசைத்தல் ஹதீஸை பதிவு செய்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்கள்:
இங்கு அசைப்பது என்று சொல்லப்படுவதன் மூலம் நாடப்படுவது
சுட்டிக்காட்டுவதாக இருப்பது தான் சாத்தியம். (அதாவது
சுட்டிக்காட்டுவதற்காக உயர்த்தும் போது ஏற்படும் அசைவுஅதை தொடர்ந்து எதார்த்தமாக ஒன்றிரெண்டு தடவை தானாக அசைவதுதொடர்ச்சியாக அசைத்து கொண்டிருப்பது என்று நாடப்படுவது சாத்தியமல்லஇப்படி கருத்துக் கொள்ளும் போது இப்னுஸ்ஸூபைரின் அறிவிப்புடன் ஒத்துவரக்கூடியதாக ஆகும்.”
(
பார்க்க : அஸ்ஸுனைனுல் குப்ரா (பைஹகீஹதீஸ் எண் : 2899, பாகம் எண்: 2, பக்கம் :132)

இது போல கடந்த நூற்றாண்டின் சிறந்த ஹதீஸ் துறை அறிஞரான அல்லாமா அஹ்மத் பின் முஹம்மத் அஸ்ஸித்தீக் அல்குமாரீ இக்கருத்தையே பதிவு செய்துள்ளார்கள்இமாம் பைஹகீயின் மேற்கண்ட கருத்தை எழுதிவிட்டு அவர்கள் கூறுவது இதற்கு வேறு அர்த்தம் இல்லைஇந்த (அசைத்தல் பற்றியவார்த்தை
அறிவிப்பாளர்கள் மாற்றியதால் ஏற்பட்டதே தவிர வேறில்லை.”
(
பார்க்கஅல்ஹிதாயா ஃபீதக்ரீஜி அஹாதீஸில் பிதாயா பாகம் : 3, பக்கம் 137, பதிப்பு : ஆலமுல் குத்துப்)

இக்கருத்தை நிகழ்கால ஹதீஸ் துறை அறிஞர் அல்லாமா ஷுஐப் அல்அர்னஊத்’ அவர்களும் கூறியிருப்பதை முன்பு குறிப்பிட்டுள்ளோம்.

இதில் முக்கியமான இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பதுவாயில் பின் ஹூஜ்ர்(ரலிஎன்ற சஹாபியின் ஹதீஸை பலரும் ஒரே மாதிரியாக அறிவிக்க ஸாயிதா என்பவர் மட்டும் அசைப்பதை சேர்த்து கூட்டி சொல்லியிருக்கும் ஒரு ஹதீஸை பற்றித்தான்.

ஸாயிதாவைத் தவிர்த்த மற்ற அறிவிப்பாளர்களின் வார்த்தையே சரி என்பதை நாம் இந்த ஹதீஸோடு தொடர்பில்லாத வேறு சஹாபாக்கள் கூறியுள்ள வேறு அறிவிப்பாளர்கள் வழியாக கிடைத்துள்ள ஹதீஸ்களைப் பார்த்து முடிவு செய்துவிடலாம்.

சுட்டிக்காட்டியதாக மட்டும் வரும் ஹதீஸ்கள்:

இப்னு உமர்(ரலி), நூல் : முஸ்லிம் 913 மற்றும் முஅத்தாஅஹ்மத்நஸாஈ

நுமைர் அல்குஸாஈ(ரலிஅவர்கள் : இப்னு  குஸைமா 716

இதுபோல் சுட்டிக்காட்டியதாகஉயர்த்தியதாகநீட்டி வைத்ததாக பல
ஸஹாபாகளால் அறிவிக்கப்பட்டுள்ள பல ஹதீஸ் நூல்களில் தஷஹ்ஹுத் பற்றிய பாடத்தில் பார்க்கலாம்.

கருத்து அடிப்படையில் : இரண்டு

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்அவர்கள் (தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்இருப்பில்துஆ செய்யும் போது தன் விரலால் சுட்டிகாட்டுவர்கள்அதை அசைக்கமாட்டர்கள். (நூல் : அபூதாவூத் 991 நஸாஈ)

ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் தெளிவாகவே விரலை அசைக்கவில்லை என்று கூறுகிறது.

இதை மறுக்க முனையும் சிலர்உடன்பாடான செய்திக்கு முன்னுரிமை கொடுத்து எதிர்மறைச் செய்தியை விட வேண்டும். என்ற நியதிப்படி செயல்பட வேண்டும் என்கின்றனர்.

அதாவது அசைத்ததாக வருவதை எடுத்துக் கொண்டு அசைக்கவில்லை என்பதை விட வேண்டும் என்கின்றனர்இவர்கள் முக்கியமான ஒன்றை கவனிக்க மறுக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலிஅவர்கள் தனது இந்த ஹதீஸில் பின்வருமாறு கூட சொல்லியிருக்கலாம்.

அத்தஹ்ஹிய்யாத் இருப்பில் நபி(ஸல்அவர்கள் தலையை அசைக்கவில்லைகண்ணை கசக்கவில்லைஉதட்டை பிதுக்கவில்லைஇடது கை பெருவிரலை உயர்த்தவில்லை.
இப்படி நபி செய்யாத பல செயல்களை இல்லை இல்லை என்று நூற்றுக்கணக்கில் சொல்லியிருக்கலாம்.

அப்படி எதையும் சொல்லாமல் இதை மட்டும் ( ஆட்காட்டி விரல் அசைப்பை மட்டும்இல்லை என்று சொல்கிறார்கள் என்றால் தகுந்த காரணம் இருக்கிறது என்பதைப் புரிய முடியவில்லையா?

காரணம்:

ஸஹாபாக்கள் காலத்தின் பிற்பகுதியில் சிலர் விரலை அசைக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்அதை கண்டதனால் தான் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரலிநபி(ஸல்அவர்கள் அசைக்கவில்லை என்கிற செய்தியைஅவ்வாறு தான் பார்த்ததின் அடிப்படையில்சொல்லி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கத்துக்கு மறுப்பை பதிவு செய்கிறார்கள்.

இந்த கருத்தை வலுப்படுத்த நடைமுறையிலுள்ள ஒரு வழக்கத்தை ஆதாரமாக கொள்ளலாம்அரபு நாடுகளுக்குச் சென்றவர்கள் பார்த்திருப்பார்கள். ஜமாஅத்தாக தொழுது கொண்டிருக்கும் போது இமாம் ஓதுகிற வசனத்தில் தவ்ஹீதை (ஏகத்துவத்தைகுறிக்கிற வசனங்கள் வரும்போது தக்பீர் கட்டி நிற்கும் நிலையிலேயே ஆட்காட்டி விரலை உயர்த்தி அதனை சில தடவை அசைப்பார்கள் சிலர்.

ஓரிறை கொள்கையை கூறுகிற வசனங்களை கேட்கும் போதும் ஓதும் போதும் ஆட்காட்டி விரலை உயர்த்த வேண்டும் என்றோ அசைக்க வேண்டும் என்றோ நபிவழியில் இல்லை.

ஆனால் மேற்கண்ட நடைமுறை இருந்து கொண்டிருக்கிறதுஆகவே இது நபியின் காலத்துக்கு பின்பு தோன்றிய புதிய பழக்கம் என்பதை புரிகிறோம்அது போலத்தான் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைப்பதும் புதிய பழக்கம்அது தோன்றுகிற காலத்திலேயே கண்ட ஸஹாபி அப்துல்லாஹ் பின் ஸுபைர். இப்படி நபி செய்யவில்லை என்ற தகவலை சேர்த்து சொல்கிறார்கள்.

ஆகவே இந்த ஹதீஸின் செய்தியை ஏற்றுக் கொள்வது கடமைஇதனால் தான் இமாம் பைஹகீ (ரஹ்அவர்கள் அசைத்தல் செய்தி இடம்பெறும் ஹதீஸை பதிவு செய்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்கள்;

அசைத்தல் என்பதன் மூலம் நாடப்படுவது சுட்டிக்காடுதலாக இருப்பது தான் சாத்தியம்அதை தொடர்ந்து அசைத்து கொண்டிருப்பது என்று நாடப்படுவது சாத்தியமல்லஇவ்வாறு கருத்து கொள்ளும் போது இப்னுஸ் ஸுபைரின் அறிவிப்புக்கு (அபூதாவூத் 991 க்கு ஓன்று பட்டதாக இந்த நபிமொழி ஆகிவிடும் அல்லாஹ் நன்கறிந்தவன்!”
– 
அஸ்ஸுனைனுல் குப்ரா 2899 / பாகம் : 2 பக்கம் :132

மட்டுமின்றிஇப்னுஸ் ஸுபைர்(ரலிஅவர்களின் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்ஆஸிம் பின் குலைபை விட தனித்தன்மை உடையவர்களாகவும் கூடுதல் சிறப்புக்குரியவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அஸ்ஸுனைனுல் குப்ரா ஹதீஸ் எண் 2895 ன் கீழ் அவர்கள் எழுதி உள்ள இச்செய்தியை மேலே நாம் எடுத்தெழுதியுள்ளோம்.

கருத்து அடிப்படையில்மூன்று!

அத்தஹிய்யாத் இருப்பில் வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்துவது பரவலாக நபிதோழர்களிடத்தில்தவ்ஹீத் (ஓரிறைக்கொள்கையை சுட்டிக்காட்டுவதாகவே கருதப்பட்டு வந்ததுஓரிறைக் கொள்கையை உணர்த்தும் விதத்தில் சுட்டிகாட்டுவதாயிருக்கும் போது நீட்டி வைத்திருப்பது தான் சரியான முறையும் ஒழுங்கும் ஆகும்.

இக்கருத்தை கூறும் ஹதீஸ்கள் சிலவற்றை பார்ப்போம்:

பிரபல தாயிஈ இப்னு ஸீரீன்(ரஹ்அவர்கள் கூறுகிறார்கள்ஒரு மனிதர் அத்தஹிய்யாத் இருப்பில் இருவிரலை (அதாவது இரு கைகளின் ஆட்காட்டி விரலையும்நீட்டி துஆ செய்து கொண்டிருப்பதை சஹாபாக்கள் பார்த்தால் அவற்றில் ஒன்றை அடித்து விட்டு அவன் ஒரே இறைவன் தான் என்று கூறுவார்கள்.” நூல் : இப்னு அபீஷையா 8522

குஃபாஃப் பின் ஈமாஉ(ரலிஅவர்கள் கூறினார்கள்அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் தஷஹ்ஹுத் ஓதுவதற்கு அமர்ந்தால் தனது விரலால் சுட்டிகாட்டுவார்கள்இதை கண்ட இணைவைப்பாளர்கள் நமக்கு இவர் சூனியம் செய்கிறார்
என்பார்கள் ஆனால் நபி(ஸல்அவர்கள் தவ்ஹீதைத்தான் நாடுவார்கள்.” நூல் : அஸ்ஸுனைனுல் குப்ராபைஹகீ 2904 பாகம் : 2  பக்கம்:132

(இந்த ஹதீஸை குஃபாஃப்(ரலிஅவர்களிடம் செவியுற்ற தாபிஈ இன்னார் என்ற பெயருடன் குறிப்பிடப்படாமல் மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு குறை ஆயினும் ஓரிறை கொள்கையை உணர்த்தும் விதத்தில் ஆட்காட்டி விரலை உயர்த்துவது அமைந்துள்ளது என்பது ஹதீஸ்களில் காணப்படும் தகவல் என்பதற்கு ஆதாரமாக இச்செய்தியை எடுத்துக்கொள்ளலாம்.)

பிரபல தாபிஈ இப்ராஹீம் கூறுகிறார்தொழுகையில் ஒருவர் தன் ஒரு விரலால் சுட்டிக் காட்டினால் அது அழகிய செயல் அது தான் தவ்ஹீத். இரு விரல்களால் சுட்டிக் காட்டக்கூடாதுஅது வெறுக்கத்தக்கது.”
நூல் : முஸன்னஃப் இப்னு அபீஷையா 8523.

கருத்து அடிப்படையில்நான்கு

அத்தஹிய்யாத்தில் நபி(ஸல்அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தியை அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரலிஅவர்கள்அவர்களின் இளைய சகோதரரும் பிரபல ஹதீஸ் அறிவிப்பாளரும் அன்னை ஆயிஷா(ரலிஅவர்களின்
மாணவருமான உர்வா பின் ஸுபைர் பற்றிய செய்தி:

ஹிஷாம் பின் உர்வா, “தன்  தந்தை உர்வாபின் ஸுபைர் தொழுகையில் தனது விரலால் சுட்டிக் காட்டுவார்கள்அதை அசைக்க மாட்டார்கள் என்று அறிவிக்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் விரலை அசைக்கமாட்டர்கள் என்று அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலிஅறிவிக்கிறார்கள்இது ஒரு செய்திஇவரின் இளைய சகோதரர் உர்வா பின் ஸுபைர் விரலை அசைப்பதில்லைஇது இன்னொரு செய்திஇந்த இரண்டாவது செய்தி நபி விரலை அசைக்க மாட்டார்கள் என்ற முந்தய செய்தியை வலுப்படுத்துகிறதுதம்பி உர்வா அண்ணன் அப்துல்லாஹ்வின் மாணவர் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இந்த விசயம் தெளிவாகப் புரியும்அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலிஅவர்களின் ஹதீஸை பலவீனப் படுத்த முனைவதும் தவறு எனபதும் புரியும்.

இது வரை எழுதியிருப்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு ஹதீஸ்ஒரு மனிதர் தொழுகையில் (இருப்பில்பொடிக்கல்லை புரட்டிக் கொண்டிருந்தார்அவர் தொழுது முடித்ததும் இப்னு உமர் (ரலிஅவர்கள் அம்மனிதரை அழைத்து நீ இப்படி செய்யாதே இது ஷைத்தானின் செயல்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் செய்தது போல் செய் என்றார்கள்அதற்கு அம்மனிதர்அல்லாஹ்வின் தூதர் எப்படி செய்வார்கள் என்று கேட்டார்அப்போது இப்னு உமர் (ரலிஅவர்கள்தனது வலது தொடை மீது தனது வலது கையை வைத்து பெறு விரலுக்கு அடுத்த விரலால் கிப்லா திசையில் சுட்டிக்காட்டினார்கள்அதன் பக்கம் தன பார்வையை செலுத்தினார்கள்பிறகு இவ்வாறுதான் ரசூலுல்லாஹ் (ஸல்அவர்கள் செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். (நூல்நஸாஈ 1160, இப்னு ஹிப்பான் 1947)

இங்கு நாம் கவனிக்க வேண்டியதுநபி (ஸல்எப்படி செய்வார்கள் என்று கேட்ட மனிதருக்கு விளக்கமளித்த இப்னு உமர் (ரலிஅசைத்துக் காட்டவில்லை அசைத்ததாக சொல்லவும் இல்லைஅது நடைமுறையாக இருந்திருந்தால் இந்த இடத்தில் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.

அல்லாஹ் நன்கறிந்தவன்!

  -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.