கேள்வி:

கேள்வி 42: CAROM BOARD விளையாடலாமா கூடாதா?

Answer by admin On June 28, 2020

பதில்:

ஹதீஸ்களில் கல்லை சுண்டி விளையாடக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. 

நபி(ஸல்) கல்லை சுண்டி விளையாடுவதால் அது எந்த எதிரியும் தாக்க போவதில்லை. ஆனால் தவறுதலாக யாருடைய கண்களையாவது பாதித்து விடும் அதனால் அதை விளையாடுவதை ரசூலுல்லாஹ் தடுத்தார்கள் என்று ஹதீஸ்களில் ஆதாரபூர்வமாக பதிவாகி உள்ளது.

Carrom Board யில் விளையாடுவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக தெரியவில்லை மற்றும் ஹதீஸின் அடிப்படையில் இவ்விளையாட்டை  தடை செய்ய முடியாது. 

பொதுவாக விளையாட்டு என்பது முக்கியமாக உடலுக்கும் மற்றும் மனதுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் ஆனால் இத்தகைய நோக்கம் Carom Board விளையாட்டில் நிறைவேறுவதில்லை. 

அதுமட்டுமில்லாமல் இவ்விளையாட்டில் முழுநேரமாக மூழ்கி இருப்பதால் தொழுகைக்கு பலபேர் போவதில்லை அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தொழவதில்லை அல்லாஹ்வின் நினைவிலிருந்து அதிகமாக திசை திருப்புகிறது மற்றும் குடும்பத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் கூட இந்த மாதிரியான விளையாட்டில் மூழ்கி இருப்பவர்கள் செய்ய முடியவில்லை. 

ஆகவே இந்த விளையாட்டு நேரடியாகப் பாவமாக இல்லை என்றாலும்கூட  இவ்விளையாட்டினால் பெரிய குறைகளும் தீங்குகளும் ஏற்படுகிறது அதனால் இவ்விளையாட்டை நாம் காசு பணம் வைத்து விளையாடாவிட்டாலும் கூட இவ்விளையாட்டை சாதாரணமாக விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 22, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.