கேள்வி:

கேள்வி 43 : ஸஜ்தா வசனம் குறித்து ஸஜ்தா செய்யலாமா கூடாதா? சூரா- 38:24, சூரா - 22:77

Answer by admin On June 28, 2020

பதில்:

சூரா ஸாது மற்றும் சூரா ஹஜ்ஜிலே சிலர் இதற்கு சஜ்தா செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் குர்ஆனில் شجدة என்று போடப்பட்டுள்ளது இப்படி கேள்வி கேட்கப்பட்டது?


 38:24 ல் வரக்கூடிய ஸஜ்தா பற்றிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் இந்த 38:24 ல் இந்த ஸஜ்தா ஒரு முக்கியத்துவமான ஸஜ்தா இல்லை ஆனால் நபி(ஸல்) அவர்கள் அதில் ஸஜ்தா செய்வதை நான் பார்த்துள்ளேன்- இது புகாரி அபூதாவூத் திர்மிதீ நஸாயீ என்ற ஹதீஸ் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரத்துல் ஹஜ்ஜிலே இரண்டு இடத்தில் ஸஜ்தா வருகிறது 18 வசனமும்,77 வசனமும் வருகிறது 18வது ஆயத்தை பற்றி எந்தக் கருத்து வேறுபாடும் வேறுபாடும் இல்லை ஆனால் 77 வது ஆயத்தை பற்றி சில பேர் இல்லை என்கின்றனர் ஹதீஸில் பார்க்கும்பொழுது இந்த 22:77 ஆயத்தில் பல்வேறுபட்ட ஸஹாபாக்கள் ஸஜ்தா செய்யப்பட்டுள்ளது ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் சூரத்துல் ஹஜ்ஜை ஓதினார்கள் அப்பொழுது இரண்டு இடத்திலும் ஸஜ்தா செய்தார்கள் அவர்களை பின்பற்றி தொழுத அப்துல்லாஹ் இப்னு இப்னு ஸாலபா (ரஹ்) என்ற தாபியீன் அறிவிக்கிறார்கள் இந்த செய்தி ஹதீஸ் கிதாப் ஆன இப்னு அபீ ஷைபா, தாரகுத்னீ, முஸ்னது ஷாஃபி போன்ற ஹதீஸ் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் (ரலி)அவர்கள் இரண்டு இடத்திலும்  செய்துள்ளார்கள் என்று தெளிவாகிறது அதேபோல் அபூதர்தா(ரலி) அவர்களும் சூறாவில் இரண்டு இடத்திலும் ஸஜ்தா செய்துள்ளார்கள் இந்த செய்தியும் இப்னு அபீஷைபா, ஹாக்கிம் போன்ற கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதையும் தாண்டி இப்னு உமர்(ரலி) இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற வேறு பல ஸஹாபாக்களும்  இந்த சூரா ஹஜ்ஜுடைய இரண்டு இடத்திலும் ஸஜ்தா செய்துள்ளார்கள். இமாம் ஹாகிம் இது சம்பந்தமாக ஹதீஸில் கூறும்போது ஒரு கூடுதல் தகவலாகவும் கூறியுள்ளார்கள் இவ்விடத்தில் ஸஜ்தா செய்கிறது என்று இருக்கிறது என உறுதியாக தெரிகிறது சூரா ஹஜ்ஜில் இரண்டு இடத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் வேண்டும். ஸஜ்தா செய்யவேண்டாம் என்ற கூற்றை நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை.

குர்ஆனில் ஸஜ்தா இருக்கிறது என்ற அடையாளம் போடப்பட்டுள்ளது நமக்கு குர்ஆனை நபி(ஸல்) அவர்களிடம் இருந்து ஸஹாபாக்களும் ஸஹாபாக்களிடமிருந்து்  தாபியீன்களும் போன்று வழி வழியாக எத்திவைத்தவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்று தெரிகிறது இதில் ஸஜ்தா இருக்கிறது இல்லை என்று சர்ச்சை செய்பவர்களை நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை. ஆகவே இந்த இரண்டு ஸஜ்தாக்களும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு நினைவூட்டல் குர்ஆனில் 15 ஸஜ்தாக்கள் இருப்பதை காண்கிறோம்.இந்த 15 ஸஜ்தாக்கள் கூட கட்டாயக் கடமை என்று ஹதீஸில் உணர்த்த படவில்லை சில இடங்களில் ஸஜ்தா செய்வது முக்கிய சுன்னத்  ஒருவேளை மிக ஆதாரப்பூர்வமாக வரக்கூடிய ஸஜ்தா வசனங்களை கூட ஓதிவிட்டு ஸஜ்தா செய்யாமல்  விட்டுவிட்டால் அது ஒரு கடமையை விட்ட குறையாக ஆகாது ஒரு சுன்னத்தை விட்ட குறை ஏற்படும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 75, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.