கேள்வி:

கேள்வி 44: வயதில் மூத்த, கணவனை இழந்த, விவாகரத்து ஆன பெண்களை திருமணம் செய்வது சுன்னத்தா?

Answer by admin On July 12, 2020

பதில்:

இது போன்ற பெண்களை மணம் முடிப்பது சுன்னத்தும் அல்ல மார்க்கத்தில் வலியுறுத்தப்படவும் அல்ல. இது அவரவருடைய விருப்பம், விரும்பி திருமணம் செய்து கொண்டாள் அனுமதி உண்டு. திருமணமாகாத கன்னிப் பெண்ணை திருமணம் செய்துகொண்டாலும் அனுமதியே, திருமணம் என்பது சுன்னத்தாகும் எந்தவகை பெண்ணை திருமணம் செய்தாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

முதல் திருமணம் செய்யக்கூடிய ஆண்மகன் முதல் திருமணம் செய்யக் கூடிய கன்னிப்பெண்ணை மணப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டக்கூடிய செயலாக இருக்கிறது.

ஜாபிர்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் திருமணம் முடித்து விட்டாயா என்று கேட்கப்பட்டபோது அவர் ஆம் என்று பதில் கூறினார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் கன்னிப்பெண்ணையா அல்லது விதவைப் பெண்ணையா என்று கேட்க அதற்கு விதவைப் பெண் என்று பதில் கூறினார் தன்னுடைய இளவயது தங்கைகளை கவனித்துக்கொள்ள விதவைப் பெண்ணை திருமணம் செய்ததாக கூறினார். நபி(ஸல்) அவர்கள் அதற்கு நீ கன்னிப்பெண்ணைத் திருமணம் செய்து இருக்கலாமே அவளும் உன்னோடு விளையாடுவாள் நீயும் அவளோடு விளையாடலாம் என்று பதில் கூறினார்கள்.(புஹாரி)

மேலும் நல்லெண்ணம் அடிப்படையில் வயதில் மூத்த பெண்ணை உதவிசெய்யும் நோக்கத்தோடு திருமணம் செய்தல் அல்லது ஒரு விதவைப்பெண் கஷ்டப்படக்கூடிய நிலையில் இருக்கிறாள் கஷ்டத்தில் இருந்து நிவாரணம் கொடுக்க எண்ணி திருமணம் செய்தல் இந்த என்னத்திற்கான கூலியை அல்லாஹ் நிச்சயம் கொடுப்பான் ஒருவன் நெருக்கடியான சூழ்நிலையில் முஃமின்களுக்கு உதவி புரிந்தாள் மறுமையில் ஏற்படக்கூடிய கஷ்டத்திலிருந்து அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அழிப்பான் இலகுவாக விடுபடக் கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுப்பான் என நபி(ஸல்) கூறினார்கள்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 34, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.