கேள்வி:

கேள்வி 45: நான் ஒன்றை நினைத்து அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன் அது நடந்தது அதை மக்களிடத்தில் கூறலாமா?

Answer by admin On July 12, 2020

பதில்:

அல்லாஹ் குர்ஆனில் உமக்கு நாம்  செய்திருக்கக்கூடிய அருட்கொடைகளை நீ பேசு (93:11) என்று குறிப்பிடுகிறான்.அந்த அடிப்படையில் நமக்கு ஏற்பட்ட நன்மையை பிறரிடத்தில் பேசலாம் அனுமதி இருக்கிறது.

அதேசமயம் இதனை கூறினால் ஏதேனும் இடையூறு அல்லது உங்களை பெருமைகாரர் என்று கூறவுர்கள் அல்லது பிறர் பொறாமைப்படக்கூடும் என்ற நிலைகள் ஏற்படும் என்று எண்ணினால் சொல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹதீஸ்களின் வாயிலாக அறியும்போது தேவைகளில் வெற்றி அடைவதற்கு நீங்கள் ரகசியத்தின் மூலம் உதவி தேடுங்கள் மறைத்து வைப்பதன் மூலம் உதவி தேடுங்கள் ஏனென்றால் அருட்கொடையை ஒருவர் பெறும்பொருட்டு மற்றொருவர் பொறாமை கொள்ளக் கூடியவராக இருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் தஃப்ரானியில் இடம்பெற்றுள்ளது.காரியம் வெற்றியடைய மறைமுகமாக உதவி தேடுங்கள் என நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள்.

இதன்மூலம், தவறான புரிதல் ஏதும் இல்லாது இருப்பின் அவர் நடந்த செய்தியை பிறருக்கு கூறலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 33, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.