கேள்வி:

கேள்வி 46: மூச்சினால் செய்யக்கூடிய திக்ஃரு இஸ்லாத்தில் இருக்கிறதா?

Answer by admin On July 12, 2020

பதில்:

நடைமுறையில் மனிதர்கள் பள்ளிவாயலில் அவரவர் ஏற்படுத்திய  முறைப்படி திக்ஃரு செய்கிறார்கள் தலையை வலப்புறம் இடப்புறம் ஆட்டியபடி, பல பேர் கூடி கைகளைக் கோர்த்துக்கொண்டு மேலும்கீழும் ஆட்டியும் புதிய வார்த்தைகளை உருவாக்கி அல்லாஹ் என்பதை ஆஹ் என்றாக்கி குதித்து இது போன்ற பலவிதமான திக்ஃருகள் மார்க்கத்தில் கூடாத அருவருப்பான ஃபித்அத்கள் ஆகும். இதனுடைய பதிவு காட்சிகளும் அதனை போலவே உள்ளது சிலர் மனதில் திக்ஃரு செய்வது மூச்சில் அந்த வார்த்தையை இழுத்துவிடுவது போன்றதாகவும் உள்ளது இதனை நாம் தடுக்க வேண்டும். இது இஸ்லாத்தை கீழ்த்தரமாக காட்டக்கூடிய ஒரு செயல் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையும் கோபப்படுத்த கூடிய காரியமாகும். இது திக்ஃரு அல்லாது வேறு பயிற்சி போன்ற காரியமாக இருந்தாலும் இந்த முறையில் பள்ளிவாயிலில் செய்தல் கூடாது. பார்ப்பவர்களுக்கு அது புதுவித வழிபாட்டு முறை என தோன்றலாம்  அதுவும் கூட இஸ்லாத்தை தவறான தோற்றத்தில் பார்க்க வழி வகுக்கும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 32, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.