கேள்வி:

கேள்வி 48: இரண்டாவது திருமணம் செய்வதற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா..?

Answer by admin On July 12, 2020

பதில்:

அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான் சூரா நிஷாவில் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை  இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்நான்காக திருமணம் செய்து கொள்ளுங்கள் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று அஞ்சினால் ஒரு பெண் போதுமானது என்று கூறுகிறான் இன்றைய நடைமுறையில் ஒருவருக்கு ஒருவர் என்றே பார்க்கப்படுகிறது  அல்லது முதல் மனைவி உடல்நிலை சரியில்லாத அல்லது குழந்தை பாக்கியம் இல்லாத இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே ஒருவர் இரண்டாவது திருமணம் செய்யலாம் என்ற தவறான பார்வை இருக்கிறது மார்க்க அடிப்படையில் அவருடைய உடல் பலம் மற்றும் பொருளாதார அடிப்படையில் அவர்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் மேலும் நான்கு பேருடனும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கான கடமையை சரிசமமாக செய்ய வேண்டும்.

ஆனால் இன்று சமூகத்தில் இரண்டு பெண்களை மணமுடித்து சரிசமமாக நடத்தினாலும் அவருக்கு இரண்டு மனைவி என்று கேலியாகவும் தரம் தாழ்த்திப் பேசுவதும் நடைமுறையில் இருக்கிறது இதற்கு காரணம் மாற்று மத அடிப்படையில் நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு உள்ளது அது தான் சரி என்கின்ற மனோபாவம் நம் சமுதாய மக்களிடமும் உள்ளது இது தவறான போக்காகும். இதனால் இரண்டாவது திருமணத்தில் ஆர்வமுள்ளவர் சமூகத்திற்காக அதனை ஏற்காமல் போவதும் முதல் மனைவி கணவன் எனக்கு மட்டும் தான் என்ற மாற்று மத மக்களின் சிந்தனை உள்ளத்தில் பதிந்து விடுவதனால் அவர்கள் அனுமதிப்பதில்லை. இது மார்க்க அடிப்படையில் தவறு அல்லாஹ் குர்ஆனில் அனுமதித்தது நபி(ஸல்) அவர்கள் அதனை வழிகாட்டியும் அதனை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்தால் அது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு, வேதத்திற்கு எதிராக அமைந்துவிடுகிறது இரண்டாவது மூன்றாவது திருமணத்தினால் நன்மை இருக்கிறது விதவை விவாகரத்து வாங்கிய பெண்கள் வாலிப வயதில் தங்கள் வாழ்க்கையை சரியாக அனுபவிக்க முடியாமல் வாழ்க்கை துணை இல்லாமலும் அவர்கள் உடல் ரீதியான  பொருளாதார ரீதியாகவும் அவர்கள் சிரமப்படுகிறார்கள்  அதே நேரம் வசதி படைத்தவர் இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என்ற போது இதுபோல் வாழ்விழந்த  பெண்களுக்கு வாழ்வழிப்பதே நியாயம் அதையே அல்லாஹ் ஊக்குவித்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் வழி காட்டிய பின்பும் அதனை தடுப்பது நியாயமாகாது முக்கியமாக முதல் மனைவி இடையூறாக இருப்பின் அல்லது தனக்கு ஏற்பட்ட குறை என்று நினைப்பதாலும் மார்க்கத்திற்கு எதிராக செயல்படும் நிலைமை ஆகிவிடுகிறது இரண்டாவது திருமணத்திற்கு பொருளாதார வலிமையும் உடல் வலிமையும் நீதியாக நடந்து கொள்வோர் ஆயினும் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் முதல் மனைவி அனுமதி பெறாமல்.

அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த பின் அவர்களுக்கு மாற்றமாக நடப்பின் இது மார்க்கத்தை புரியாததால் ஏற்படும் தவறான போக்கு இந்த நிலை மாறவேண்டும் இதன் மூலம் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்வோராயின் முதல் மனைவி அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்று அதனை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 124, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.