கேள்வி:

கேள்வி 49: CAA, NRC, NPR, சட்டத்தினால் மனரீதியான கஷ்டம்- நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

Answer by admin On July 12, 2020

பதில்:

இறைமறுப்பாளர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு கொடுத்த தொல்லைகள், இடையூறுகள் எல்லாம் இக்காலகட்டத்தில் ஏற்படுவதில்லை என்று நாம் நினைத்து பார்க்கவேண்டும். 

 நபி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்னிருந்த காலகட்டத்தில் நபிகளுக்கும் அவருடைய சமுதாயத்திற்கும் இதேபோன்ற இடையூறுகளும் மேலும் இதைவிட கடினமான இடையூறுகளை இறைமறுப்பாளர்கள் செய்திருக்கிறார்கள், அதை நாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் பார்க்கின்றோம். 

ஆகையால் இது போன்ற கருப்பு சட்டத்தை எண்ணி நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. 

ஏனென்றால் நமக்கு முன் வாழ்ந்த மக்களும் மூமீன்களும் அனுபவித்த கொடுமைகளை சேர்த்து வைத்து பார்த்தால் இது வெறும் சிறிய பிரச்சனை தான். கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு இதிலிருந்து விடுதலை தருவானாக.

ஹதீஸில்  குறிப்பிடப்பட்டுள்ளதை போல பொதுவாக நமக்கு எந்த ஒரு இடையூறு ஏற்பட்டாலும் அதை நாம் பொறுமையாகவும் தொழுகையை கொண்டும் அதை எதிர்கொள்ள வேண்டும் மேலும் இத்தகைய இடையூறுகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். 

முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து இந்தப் பிரச்சனையை சமாளிக்க வேண்டும் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சரியான முடிவுகளை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்

முக்கியமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எந்த ஒரு இடையூறும், நெருக்கடியும் மற்றும் பாரமும் ஏற்பட்டால் உடனே தொழுகைக்கு விரைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் யூனிஸ் மீன் வயிற்றில் இருந்தபோது கூறிய திக்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடியாருக்கு நெருக்கடி ஏற்படும் போது அந்த திக்ரை சொன்னால் அல்லாஹ் இக்கட்டான  சூழ்நிலைகளில் இருந்தும் நெருக்கடியிலிருந்தும் விடுதலை தருவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகையால் நாம் ஈமான் கொண்டு அல்லாஹ்வின் கடமைகளை செய்தவராக இருந்து அவரிடம் இந்தக் கருப்புச் சட்டத்திலிருந்து எந்த  நெருக்கடியும், இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று உதவி தேடினால் அல்லாஹ் இந்த சட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 10, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.