கேள்வி:

கேள்வி 50 : Corona virusக்கு இஸ்லாமிய மருத்துவம் ஏதேனும் உண்டா?

Answer by admin On July 12, 2020

பதில்:

இஸ்லாத்தில் கொரோனா வைரஸ்க்கு மருந்து எதுவும் குறிப்பிடவில்லை ஆனால் நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு அக்காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர் சில மருந்துகளை அறிவுறுத்தியுள்ளார். 

ஆனால் எல்லாவிதமான நோய்களுக்கும் நபியவர்கள் மருந்து தெரிவிக்கவில்லை மேலும் அந்த நோக்கத்திற்காகவும் அவர் அனுப்பப்படவில்லை. 

ஹதீஸில் அல்லாஹ் கூறுகின்றான் எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது அதை "அறிந்தவர்கள் அறிவார்கள் அறியாதவர்கள் அறியமாட்டார்கள்" ஆகையால் இவ்வசனத்தின் அடிப்படையில் இப்பொழுது நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் corona வைரஸ்க்கு ஏதேனும் மருந்து கண்டுபிடித்து அதை அறிந்தவர்கள் நமக்குக் கூறும் போது அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 09, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.