கேள்வி:

கேள்வி 51: சூரியனை பூமி சுற்றி வருகிறதா?

Answer by admin On July 12, 2020

பதில்:

பூமி சூரியனை சுற்றி வருவது அல் குர்ஆனுக்கு மாற்றமானதா என்று கேட்கப்பட்டுள்ளது. 

இப்படி சொல்லுவது குர்ஆனுக்கு மாற்றமான கருத்து இல்லை, இக்கருத்து குர்ஆனுக்கு உட்பட்டுள்ள கருத்துதான்

ஏனென்றால் குர்ஆனில் கோள்களை பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது அனைத்தும் அந்தரத்தில் நீந்துகின்றன என்று கூறப்பட்டுள்ளது சூரியன் சந்திரன் அனைத்துக் கோள்களும் அந்தரத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன(21:33) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சூரியன் பூமிக்கு வெளிச்சத்தைத் தருகிறது(91:1) என்று பலமுறை குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான். மேலும் இரவிலே பகலையும் பகலிலே இரவை புகுத்துவதையும்(3:27) அல்லாஹ் பலமுறை சொல்லிக் காட்டுகின்றான் ஆகையால் இக்கருத்து பூமி தன்னைத்தானே சுற்றி வரும் என்று பொருள் தருகிறது மற்றும் அனைத்து கோள்களும் அந்தரத்தில்  நீந்திக் கொண்டிருக்கின்றன என்ற வசனம் பூமி சூரியனை சுற்றி வரலாம் என்று பொருள் ஆகும். 

எனவே பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது குர்ஆனுக்கு உட்பட்ட கருத்தாகும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 16, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.