கேள்வி:

கேள்வி 58: COVID19 கொரானா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது இந்த சமயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

Answer by admin On July 18, 2020

பதில்:

சோதனைகள் அதிகமாகும்போதும் அதனுடைய பாதிப்புகள் அதிகமாகும்போதும் நாம் அல்லாஹ்வின் மீது அதிகம் தவக்குல் வைத்து அவனை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும். கஷ்டங்கள் சோதனைகள் ஏற்படும் போது அல்லாஹ் திருகுர்ஆனில் கூறுகையில் நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் எங்களைத் தீண்டாது அவனே எங்களின் பொறுப்பாளன் எஜமானன். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது தன் பொறுப்பை சாட்டட்டும் ஆக எந்த சோதனையாக இருப்பினும் இந்த வசனத்தை நாம் மனதில் உறுதியாக  வைத்திருத்தல் வேண்டும் .மேலும் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பின் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மக்கள் புலம்பெயருதல் கூடாது அல்லது வெளியூரில் இருந்து மக்கள் பாதிக்கப்படைந்த இடத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளாகும் இந்த COVID19 நமக்கு ஏற்பட்ட சோதனைகளாகும் நமக்காகவும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்காகவும் அதிகமாக தூஆ(பிரார்த்தனை) செய்யவேண்டும் தூஆ முஃமின்களின் ஆயுதமாகும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 08, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.