கேள்வி:

கேள்வி 59:மனதில் திட்டினால் தீமை எழுதப்படுமா?

Answer by admin On July 18, 2020

பதில்:

 ஒருவர் தன் மனதில் திடீரென்று நினைக்கும் தீமையான, தவறான எண்ணங்களை வெளிப்படையாக பேசாமல் மற்றும் அதை செயல்படுத்தாமல்  இருக்கும் வரை அல்லாஹுத்தஆலா மன்னித்து விடுகின்றான் என்று ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆனால், ஒருவரைப்பற்றி மனதில் கெட்ட எண்ணங்களை வளர்த்துக்கொண்டு மேலும் குரோதம் கொண்டு மனதளவில் திட்டிக் கொண்டிருப்பதினால் அது ஒரு காலகட்டத்தில் குற்றமாகவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


இதற்கு ஆதாரமாக குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான் "ஈமான் கொண்டவர்களே உங்கள் மனதில் தோன்றும் அதிகமான எண்ணங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்" ஏனென்றால் சில எண்ணங்கள் பாவங்களாக இருக்கின்றன என்று அல்லாஹுத்தஆலா சொல்கின்றான்


ஒருவரின் மேல்  காழ்புணர்ச்சி கொண்டும் பகைமை கொண்டும் மேலும் அவரின் மேல் கெட்ட எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டு அவரை திட்டுவது குற்றமாக அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது இதற்கு அல்லாஹ்வுடைய இந்த வார்த்தை  எச்சரிக்கையாக அமைகிறது.


ஆகவே நாம் முடிந்தவரை எண்ணங்களை சரி செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 


அல்லாஹ் நம் அனைவருக்கும் எண்ணங்களையும் செயல்களையும் சீர்படுத்துவானாக.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 40, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.