கேள்வி:

கேள்வி 61:ரமலானில் இரவுத் தொழுகையில் முழு குர்ஆன் முடிக்க வேண்டுமா?

Answer by admin On July 18, 2020

பதில்:

ரமலான் இரவில் முழு குர்ஆனையும் முடிக்கவேண்டும் என்று நமக்கு வலியுறுத்தப்படவில்லை ஆனால் பொதுவாக ரமலான் நாட்களில் குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுதல் இருக்கின்றது. 


நபி(ஸல்) அவர்கள் ரமலான் நாட்களில் ஒவ்வொரு நாள் இரவிலும் ஜிப்ரில்(அலை) அவரை சந்திக்கும்போதெல்லாம் குர்ஆனை ஒருவருக்கொருவர் ஓதிக்காட்டிக் கொள்வார்கள்.மேலும் ரமலான் நாட்களில் நபியவர்களுக்கு இறங்கிய சூராக்கௗயும் ஓதிக்காட்டிக் கொள்வார்கள். 


நபி(ஸல்) அவர்கள் இறந்த வருடத்தில் குர்ஆன் முழுவதையும் இரண்டு முறை ஜிப்ரில்(அலை)மிடம் ஓதிக்காட்டினார்கள். 


ஆகவே ரமலான் நாட்களில் குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும் என்ற நடைமுறை நம்முடைய மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தொழுகைக்கு வெளியே நாம் அதிகமாக ஓத வேண்டும் மற்றும்  ஒவ்வொரு இரவுத் தொழுகையின் போதும் குர்ஆனை ஓதி முழுமையாக முடிக்கவும் செய்யலாம்.



- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 41, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.